ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் அழைப்பு விடுத்துள்ளார்…

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அழைப்பை விடுத்துள்ளார்.

மாவனல்லையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இந்த அழைப்பினை விடுத்தார்.

இதன்போது பேசிய அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தேர்தலின்போதும் வேட்டையாடப்பட்டனர். தேர்தலின் பின்னரும் அவர்கள் வேட்டையாடப்பட்டனர். எனவே அவர்கள் தமது

கட்சியுடன் இணைந்து செயற்படுவதே மரியாதையைக் கொடுக்கும் என்று கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியுடன் எதிர்கால தேர்தலில் இணைந்து செயற்படும் நோக்கில் அந்தக்கட்சியுடன் பேச்சு நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத்தலைவர் ருவன் விஜயவர்த்தன அண்மையில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான உறவில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக அக்கட்சியினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.