ஐடிஐ, பட்டதாரிகள் வாய்ப்பு… முத்திரை தாள் அச்சகத்தில் வேலை

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் முத்திரைதாள் மற்றும் நாணயம் அச்சடிக்கும் அச்சகத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் ஐடிஐ, பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். IGMK/HR/(ESH)/Eect,/01/2020

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Supervisor (Tech-Operation) – 10
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், மெட்டாலர்ஜிக்கல் பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பி.இ, பி.டெக் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் ரூ.26,000 – 1,00,000
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Engraver-III – 06
தகுதி: Fine Arts பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,500 – 20,858
வயதுவரம்பு: 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Office Assistant – 12
பணி: Junior Bullion Assistant – 10
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்று ஆங்கிலம் தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,350 – 20,470
வயதுவரம்பு: 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Technician(Electronics) – 16
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்து ஒரு வருட என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.7,750 – 19,040
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மதிப்பெண், தட்டச்சு திறன், ஆன்லைன் எழுத்துத்தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டிஸ மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.igmkolkata.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய www.igmkolkata.spmcil.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.02.2021

 

Comments are closed.