ஐஸ்வர்யாவுக்கு நிம்மதி தரும் ‘அந்த’ காதல்

ஒரு மாதம் காலம் கழித்து ஜிம்மில் ஒர்க்அவுட் செய்ததை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார் ஐஸ்வர்யா. இந்நிலையில் தான் புத்தகம் ஒன்றை வாசிக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, தன் குழு வேலைக்காக வரும் முன்பு படிப்பதாக தெரிவித்துள்ளார். #booklover

ஐஸ்வர்யாவின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

என்ன செய்தாலும் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவீர்களா?. வேண்டாம் அக்கா. நீங்கள் சந்தோஷமாக இருப்பதை யாருக்கும் நிரூபிக்க வேண்டியது இல்லை.

போட்டோஷூட் நடத்துவதை விட்டுவிட்டு பிள்ளைகளுடன் நேரம் செலவிடுங்கள். தலைவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.

தனுஷை பிரிந்து வாழும் ஐஸ்வர்யா, கெரியரில் பிசியாகி வருகிறார். ஓ சாத்தி சல் எனும் பாலிவுட் படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் பாலிவுட் செல்கிறார் ஐஸ்வர்யா.

ஓ சாத்தி சல் தவிர்த்து மேலும் ஒரு இந்தி படத்தை இயக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இது தவிர்த்து ராகவா லாரன்ஸின் துர்கா படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.