ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

மன்னார் – வெள்ளம்குளம் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்று (01) காலை முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்ட போது, போதைப்பொருட்களுடன் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 2 கிலோ 900 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.