ஐஸ் – ஹெரோயினுடன் இரு பெண்கள் கைது

கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஸ்டேஸ் வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 23 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 12 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர் இன்று (26) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கொம்பனித்தெரு காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 8 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (26) கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொம்பனித்தெரு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments are closed.