ஒடிசா அணியிடம் மும்பை தோல்வி

11 அணிகள் இடையிலான 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று இரவு நடந்த 48-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. அணி, நடப்பு சாம்பியன் மும்பை சிட்டியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஒடிசா அணி 4-2 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டிக்கு அதிர்ச்சி அளித்தது. 9-வது ஆட்டத்தில் ஆடிய ஒடிசா அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள மும்பை அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.

Comments are closed.