கஞ்சாவுடன் மூவர் கைது

வடக்கு கடற்பகுதியில் 150 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பகுதியில் நேற்றிரவு வடமத்திய கடற்படை கட்டளைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 9 மூடைகளில் காணப்பட்ட கஞ்சா அடங்கிய 68 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 4 கோடியே 50  இலட்சம் ரூபா என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மன்னார் மற்றும் பேசாலை பகுதியைச் சேர்ந்த 22 – 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பூகொட முகாமுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மல்வான பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவுடன் 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

Comments are closed.