கஞ்சா தோட்டமொன்று சுற்றிவளைக்கப்பட்டது
படிகெபுஹெல பிரதேசத்தில் நேற்று (09) காவல்துறையினரால் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 2,480 கஞ்சா செடிகள் அடங்கிய கஞ்சா தோட்டமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படிகெபுஹெல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இன்று (10) வெல்லவாய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.