கடலில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
அம்பாந்தோட்டை,தங்கல்ல காவல் பிரிவுக்குட்பட்ட மாவெல்ல துறைமுகத்தில் கடலில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை தங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர். சீனிமோதர பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரே இன்று இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்காக தங்கல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.