கடவுச்சீட்டு பெற வரிசையில் நின்றிருந்த பெண் குழந்தையை பிரசவித்தார்

கடவுச்சீட்டுக்காக வரிசையில் காத்திருந்த பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு காரியாலயத்துக்கு முன்பாக வரிசையில் கடவுச்சீட்டு பெறுவதற்காக,  குறித்த பெண் வரிசையில் காத்திருந்துள்ளார்.

அதன்போது, பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த இராணுவத்தினரால் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் குழந்தையை பிரசவித்ததாக தெரியவந்துள்ளது.

 

ஹட்டன் பகுதியைச் சேர்ந்த  26 வயதான பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், தாயும்,  குழந்தையும் பொரளை – காசல்வீதி மகளிர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.