கணவருக்கு பாத பூஜை செய்த பிரணிதா

‘உதயம்’, ‘சகுனி’, ‘மாஸ்’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ போன்ற பல படங்களில் நடித்தவர் பிரணிதா. ஏராளமான தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருக்கிறார். படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதே, கடந்த ஆண்டு நித்தின் ராஜு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும், சமூக வலைதளங்களில் அவர் அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில் பீமா அமாவாசை தினத்தையொட்டி தனது கணவருக்கு பாத பூஜை செய்யும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நாளில் கணவருக்கு பாத பூஜை செய்வது மிகவும் சிறப்பானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் பெண்கள் ‘இது தெரியாமல் போச்சே…’ என்று புலம்பி வருகிறார்கள். திருமணமான நடிகைகளும் யோசித்து வருகிறார்கள்.

Comments are closed.