கண்டியில் உள்ளபாடசாலை ஒன்றின் அதிபர் தாக்குதலில் மயங்கி விழுந்த மாணவி!

கண்டியில் உள்ளபாடசாலை ஒன்றின் அதிபர் எஷ்லோன் பட்டையால் மாணவியை கடுமையாக தாக்கியதில் மாணவி மயங்கி சுயநினைவை இழந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சமபவம் இன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

கண்டி, தமிழ் மகா வித்தியாலத்தில் தரம் 12யில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு அதிபரின் தாக்குதலில் மயங்கியுள்ளார்.

குறித்த மாணவி சுகவீனம் காரணமாக பாடசாலைக்கு ஒரு நாள் சமூகமளிக்கவில்லை என கூறப்படுகின்றது.

இதன் காரணமாக அதிபர் மாணவியை கடுமையாக திட்டியதுடன் எஷ்லோன் பட்டையால் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான மாணவி சுயநினைவு இல்லாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Comments are closed.