கண்டி திகன நிலஅதிர்வு அறிக்கை இன்று ஒப்படைப்பு!
கண்டி திகன பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலஅதிர்வு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவிடம் இன்று ஒப்படைக்கப்படும்.
இந்த குழுவில் 12 பேராசிரியர்கள் மற்றும் புவியியலாளர்கள் உள்ளடங்கியிருந்தனர்.
குழுவின் தலைவரான, புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல, இந்த அறிக்கையில் நிலநடுக்கத்துக்கான காரணங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளும் அடங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் திகனவில் ஐந்து சிறியளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதனையடுத்து, நில அதிர்வுகளால் விக்டோரியா நீர்த்தேக்கத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய 12 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.