கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகள் முடக்கம்

கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று(06) அதிகாலை 05 மணிமுதல் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கண்டி − பூஜாபிட்டிய பகுதியிலுள்ள பமுனுகம மற்றும் தினவத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இரத்தினபுரி − எஹலியகொட பொலிஸ் பிரிவின் மொலகல்ல பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.