கனடாவில் சிறுவர்கள் தொடர்பான குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கைது !
கனடாவில் சிறுவர்களின் தகாத படங்கள் தொடர்பான விசாரணையின் போது தமிழர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் டொராண்டோவில் வசிக்கும் 31 வயதான தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விக்டோரியா பூங்கா மற்றும் சன்ரைஸ் அவென்யூ பகுதிகளில் உள்ள வீடுகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறுவர்களின் தகாத படங்களை உருவாக்க இணைய பயனர்கள் குழந்தைகளைத் தூண்டுகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவல்படி, குறித்த வளாகத்தில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பொருட்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர்களை தூண்டுதல், சிறுவர்களின் தகாத படங்களை வைத்திருத்தல் மற்றும் சிறுவர்களை அணுகி தகாத படங்களை உருவாக்கியமை போன்ற குற்றச்சாட்டுகள் சந்தேகநபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், குறித்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.