கனடாவில் பாடசாலை வாசலில் மாணவியை கடத்த முயன்ற இளைஞன்!

கனடாவில் பள்ளிக்கூடத்தின் வாசலில் மாணவியை கடத்த முயன்ற இளைஞனை பொலிசார் தேடி வருகின்றனர்.

ரொறன்ரோவில் உள்ள எட்டோகிகோக் பள்ளியின் வாசலில் மாணவிகள் இரு தினங்களுக்கு முன்னர் நின்றிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இளைஞன் 8 வயதான மாணவியை தனது தோளில் வைத்து தூக்கி கொண்டு கடத்த முயன்றான்.

இதை அங்கிருந்த மாணவ, மாணவிகள் பார்த்ததால் பயந்து போன இளைஞன் கடத்த முயன்ற மாணவியை கீழே இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறான்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்த சம்பவத்தில் குறித்த மாணவிக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

அவளை கடத்த முயன்ற இளைஞனுக்கு வயது 20களில் இருக்கும், நல்ல பருமனாக இருப்பார்.

அந்த இளைஞன் தனக்கு கிடைத்த மாணவியை கடத்த முயன்றானா அல்லது அந்த மாணவியை தான் குறி வைத்து கடத்த முயன்றானா என்ற விபரம் தெரியவில்லை.

சம்பவம் குறித்து யாருக்கேனும் தெரிந்தாலோ அல்லது இது தொடர்பான வீடியோ இருந்தாலோ எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

Comments are closed.