கனமழை 70 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின

தாய்லாந்தில் கனமழையில் இருந்த தப்பிக்க வீட்டு கூரைகளில் தஞ்சமடைந்த மக்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ 30 மாகாணங்களை டியான்மு சூறாவளி தாக்கிய நிலையில் வரலாறு காணத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது.

கனமழையால் 70 ஆயிரம் வீடுகள் வரை நீரில் மூழ்கி உள்ளன.  நாட்டின் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இதுவரை  7 பேர் வரை உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை ரப்பர் படகுகள் கொண்டு மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Comments are closed.