கமல்ஹாசன் எழுதிய குத்துப்பாடல்

கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்காக கமல்ஹாஸன் ஒரு பாடலை எழுதி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

’பத்தல பத்தல’ என்று தொடங்கும் இந்த பாடல் ஒரு அட்டகாசமான குத்து பாடல் என்றும் இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணி புரிந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது

கமல்ஹாசன் இந்த குத்துப் பாடலுக்கு செம ஆட்டம் போட்டு உள்ளதாகவும் இந்த பாடல் நவம்பர் 7ஆம் தேதி வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் வெளிவந்தால் கமல் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாசில் ஆகிய மூன்று பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.