கம்பளையில் பாடசாலை மாணவர்களை தாக்கி பணம் கொள்ளையடிக்கும் கும்பல்

கம்பளையில் பாடசாலை மாணவர்களை தாக்கி பணம் கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் பெற்றோர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கம்பளை பேருந்து நிலையத்திற்கு வரும் பாடசாலை மாணவர்களை கொடூரமாக தாக்கி, இந்தக் கும்பல் பணம் பறிப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்

9 பேர் கொண்ட இந்த குழுவில் உள்ள அனைவரும் 19 – 20 வயதிற்குட்பட்டவர்களாகும். அவர்கள் காதுகளில் தோடு அணிந்து தலைமுடிகளுக்கு நிறம் பூசி திரைப்படங்களில் வரும் ரவுடி கும்பல் போன்று செயற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த குழுவினால் கம்பளை குருந்துவத்தை பாடசாலை மாணவர்கள் இருவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டு பணம் கேட்டுள்ளனர். எனினும் மாணவர்கள் பணம் கொடுக்காமல் பேருந்திற்குள் ஏறியுள்ளனர். பேருந்திற்கு புகுந்து மாணவர்களை மீண்டும் மிக மோசமாக தாக்கியுள்ளனர். இது தொடர்பில் கம்பளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புஸ்ஸலாவை பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவர்களிடம் 20 ரூபாய் பணம் கேட்கப்பட்டுள்ளது. எனினும் மாணவர்களிடம் 20 ரூபாய் இல்லை என கூறியமையினால் தாக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் பேருந்திற்குள் நுழைந்து கொடூரமாக தாக்கியமையினால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கும்பலினால் மேலும் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Comments are closed.