கம்பஹா, களுத்துறை மாவட்டத்தின்பாடசாலைகள் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி திறப்பு

கம்பஹா மாவட்டத்தில் 590 பாடசாலைகளில் 589 பாடசாலைகள் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி திறக்ககூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் பேராசியரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

மினுவாங்கொட – கல்லொலுவ அல் அமான் கல்லூரியை மாத்திரம் திறக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார். புலமைப்பரிசில் பெறுபேறுகளுக்கு அமையஇ தரம் 6க்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை ஒரு மாதத்தால் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் 446 பாடசாலைகளில் 442 பாடசாலைகளை திறக்கக்கூடியதாக இருக்கும் என்றும் களுத்துறை மாவட்டத்தின் பிரதேச இணைப்புக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

​நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கல்வி அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

Comments are closed.