கம்பஹா மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

கம்பஹா மாவட்டத்தின் 12 முதல் 18 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக 12 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் கொவிட் தடுப்பூசியினை செலுத்தும் திட்டத்தினை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.