கம்பஹா விக்ரமாராச்சி மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழகமாக மாற்றம்

கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவதன் ஊடாக 7 புதிய பட்டப்படிப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த கல்லூரியை பல்கலைகழகமாக மாற்றும் முதற்கட்ட நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஆயுர்வேத விஞ்ஞானத்தைப் பயிலும் மாணவர்களுக்கு ஆயுர்வேத முறைகளை கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியாக கற்பிக்கும் நோக்குடன் ஆயுர்வேத சக்கரவர்த்தி பண்டிதர் ஜி.பி. விக்ரமாரச்சியினால் கம்பஹா சித்தாயுர்வேத கல்லூரி 1929 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

முதல் மாணவர் குழுவில் 20 மாணவர்கள் இருந்தனர்.

விக்ரமாரச்சி மருத்துவக் கல்லூரி 1995 ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு பல்கலைக்கழக நிறுவனம் என்ற நிலைக்கு தரமுயர்த்தப்பட்டது.

தெற்காசிய பிராந்தியத்தில் சுதேச மருத்துவக் கல்வி மத்தியநிலையமாக மேம்படுத்தும் நோக்கத்துடன் 2021 மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம், இலங்கை என்ற பெயரின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கையின் 16 வது பல்கலைக்கழகமாகும்.

ஒரு குழுவில் 50 மாணவர்கள் என்ற வகையில் இந்த வருடம் 350 மாணவர்கள் இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.

Comments are closed.