கர்ப்பிணிகளுக்கு பால்மா வழங்க நடவடிக்கை

வடமாகாணத்தில் 14 ஆயிரத்து 617 கர்ப்பிணிப் பெண்களுக்கு 400 கிராம் அங்கர், ரத்தி பால்மா பைக்கெட்டுகளை ரூபா 280க்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு பதிவாளருமான மு.நந்தகோபன் தெரிவித்தார்.

அதன்படி யாழ் மாவட்டத்தில் 7272 கர்ப்பிணிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2100 கர்ப்பிணிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1300 கர்ப்பிணிகளும், வவுனியா மாவட்டத்தில் 2230 கர்ப்பிணிகளும், மன்னார் மாவட்டத்தில்1715 கர்ப்பிணிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்களுக்கும் தலா இரண்டு பால்மா பைகள் வழங்கப்படுவதோடு அவர்களுக்கு உரிய முறையில் பகிர்ந்தளிப்பு அதற்குரிய நடவடிக்கைகளை மாவட்ட உதவியாளர்களின் நெறிப்படுத்தலில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் இடம்பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments are closed.