கல்வி அமைச்சு விடுத்துள்ள ஓர் விசேட அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள், நாளை(25) மீள திறக்கப்படவுள்ளன.

இதன்போது முதற்கட்டமாக தரம் 11 வகுப்பு மாணவர்கள் மாத்திரம்  பாடசாலைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

மேல் மாகாணத்தில் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் கல்வி பயிலும் 907 பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நாளை முதல் பிரத்தியேக வகுப்புகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.