கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள முக்கிய அறிக்கை!

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்னும் கூடிய அளவில் சுகாதார நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது.

அந்தவகையில், பாடசாலை மட்டத்திலும் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பாடசாலை வளாகத்திற்கு வௌியில் அதிகளவு மாணவர்களை ஒன்றுகூட்டி நடைபவனி, வாகனப் பேரணி மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சு சற்று முன் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வௌிநபர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாடசாலைகளுக்குள் நடத்தப்படக்கூடிய விவாதப்போட்டி, பேச்சுப்போட்டி, மரநடுகை நிகழ்வு ஆகியவற்றின் போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் திறமைகளைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில், அதிகளவானோரை ஒன்றிணைக்காது நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக நடத்தப்படும் உத்தியோகபூர்வ அரச நிகழ்வுகளின் போதும் சமூக இடைவௌியைப் பேணி, சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்ற வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Comments are closed.