கல்வி கற்க வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் கிராம சேவகர் கைது!

16 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் கிராம சேவகர் ஒருவரை ஹபரதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

37 வயதான கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவன் ஹபரதுவ – கட்டுகருந்த பகுதியில் வசிப்பவர் எனவும், குறித்த சிறுவனுக்கு கிராம சேவகர் கணித பாடம் கற்பித்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்வி கற்க வந்த மாணவனை அச்சுறுத்தி, 2018 முதல் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக கராபிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஹபரதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.