களுத்துறைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட பி.சி.ஆர் இயந்திரம்

ஹொரனை குருந்துவத்தை விகாராதிபதி சுவசரண சுகாதார நிதியத்தின் ஆலோசகர் சங்கைக்குரிய உடுகல்மோட்டே சிறிவிமல தேரர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நன்கொடையாளர்களின் பங்களிப்பில் வாங்கப்பட்ட புதிய பி.சி.ஆர் இயந்திரம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

மாவட்டத்தின் தேவைகளுக்காக களுத்துறை சுகாதார நிறுவனத்தில் இந்த புதிய பி.சி.ஆர் இயந்திரம் வைக்கப்படும். சங்கைக்குரிய உடுகல்மோட்டே சிறிவிமல தேரர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஜனாதிபதியிடம் வழங்கினார்.

அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comments are closed.