கழுத்தில் பெயர் பலகையை அணிந்து போலீசில் சரணடைந்த கொள்ளையன்

உத்தரபிரதேச மாநிலம் பட்டன் மாவட்டத்தை சேர்ந்த ஃபர்கன் பல்வேறு கொள்ளை வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். குறிப்பாக, கடந்த மாதம் 5-ம் தேதி வியாபாரி ஒருவரிடமிருந்து ரூ.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கிலும் ஃபர்கன் தேடப்பட்டு வந்தார்.

இதனை தொடர்ந்து ஃபர்கன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், போலீசார் தன்னை சுட்டுக்கொன்றுவிடலாம் என அஞ்சிய ஃபர்கன் நேற்று போலீசில் சரண் அடைந்தார். ’என்னை சுட்டுவிடாதீர்கள், போலீஸ் மீதான பயத்தால் நான் சரணடைகிறேன்’ என்று எழுதப்பட்ட பெயர் பலகையை கழுத்தில் அணிந்தபடி பிஹ்தா நகர போலீசில் நிலையத்தில் ஃபர்கன் நேற்று சரணடைந்தார்.

இதையடுத்து, ஃபர்கனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.25 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Comments are closed.