காட்டு யானை உயிரிழப்பு – ஒருவர் கைது!

கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காட்டு யானை ஒன்று வயல் நிலத்தினை உணவாக்கி அழித்துள்ளதுடன், பின்னர் அப்பகுதியில் உயிரிழந்துள்ளது.

நேற்றுக் காலை வயல் நிலத்தை பார்வையிட சென்ற பொது மக்கள் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராம சேவையாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

உயிரிழந்த யானை தந்தந்துடன் காணப்படுவதுடன் குறித்த பகுதி அடர்ந்த காட்டினை அண்மித்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த யானை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கல்மடு பகுதியை சேர்ந்த ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

Comments are closed.