காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி வாவியில் மீன்பிடிக்க சென்று வாவியில் விழுந்து காணாமல் போன இளைஞர் சடலமாக இரண்டு தினங்களுக்கு பின்னர் இன்று (06) பழைய கல்முனை வீதி காத்தான்குடி வாவியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய மீரா முகைதீன் முகமது முனாஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று முன்தினம் (04) வாவியில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகில் காணப்பட்ட வலையை ஒழுங்குபடுத்துவதற்காக சிறிய தோணி ஒன்றில் படகை நோக்கி சென்று கொண்டிருந்த போது தவறி வாவியில் விழுந்;து காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞனை தேடும் பணிகள் இடம் பெற்றுவந்த நிலையில் இன்று காத்தான்குடி வாவியில் சடலம் ஒதுங்கியிருப்பதை கண்டுபிடித்து மீட்கப்பட்டது

இதில் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்பகைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments are closed.