காணாமல் போன 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு!!

காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவன் நேற்று இரவு 10.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்தார்.

தனக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்பதனால்,இவ்வாறு வீட்டை விட்டு சென்றதாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,வீட்டுக்கருகிலேயே இத்தனை நாட்கள் இருந்ததாகவும் அந்த மாணவன் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.