காதல் பிரச்சினையில் 2 வயது சிறுமி கொலை

ராய்காட்டை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது30). கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் உறவுக்கார பெண்ணை காதலித்து வந்து உள்ளார். இந்த காதலுக்கு பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த ருத்ரா என்ற பெண் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி ருத்ராவின் 2 வயது மகள் மாயமானார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி, சந்தோசுடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தோசை வலைவீசி தேடினர்.

இதில் அவர்சில்வாசா பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் சந்தோசை கைது செய்தனர். விசாரணையில் அவர் சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து, தலையை கல்லால் சிதைத்து ரோகா- முர்டு சாலையில் போட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து சந்தோசை கைது செய்த போலீசார், சிறுமியின் உடலையும் மீட்டனர்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவரின் 2 வயது மகளை வாலிபர் கொலை செய்த சம்பவம் ராய்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.