கான்ஸ்டபிள் பலி

தங்காலை, வித்தாரந்தெனிய பிரதேசத்தில் அடையாளம் தெரியாத குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விடுமுறையில் சென்றிருந்த குறித்த காவல்துறை உத்தியோகத்தர், நேற்றிரவு வர்த்தக நிலையத்துக்கு சென்றபோது, சிலர் அவரைத் தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட முரண்பாடே இந்தக் கொலைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் கொல்லப்பட்ட 34 வயதான குறித்த காவல்துறை உத்தியோகத்தர், அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவின், கசாகல காவல்துறை சோதனைச்சாவடியில் பணியாற்றியவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments are closed.