காலநிலை மாற்றம் – கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

கடலில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றங்கள் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மீனவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதனால் அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர். காலை முதல் மாலை வரை மப்பும் மந்தாரமுமாக இருந்த நிலையில் இடையிடையே சிறிய மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில், போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு, காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்ப்பட்டுள்ள திசை மாற்றம் கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக இவ்வாறான காலநிலை மாற்றங்களினால் கடலரிப்பு அதிகமாக ஏற்படுவதினாலும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.

Comments are closed.