காலியில் மாணவர்கள் மத்தியில் பரவும் கொரோனா

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இதுவரையான காலப்பகுதியில், காலி மாவட்டத்தில் 43 மாணவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

காலி மாவட்டத்தைச் சேர்ந்த 23 பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவ தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் நேற்றைய தினம் வரை 38 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Comments are closed.