காவலுக்கு நின்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி!
மஹவ நகரில் இரவு நேர காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், கத்திக்குத்துக்கு இலக்காகி, நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்ளரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகிக்கும் வகையில் நகரில் சுற்றித்திரிந்த நால்வரை விசாரித்த போது, அதிலொருவர் பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்தியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திய நபரும் மற்றொரு சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மஹவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.