காவல் துறையினரால் சந்தேக நபரொருவர் சுட்டுக் கொலை…!

வேயங்கொடையில் இன்று கொல்லப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் காவல் துறையினருக்கு தகவல் வழங்கிய ஒருவரை கூாிய ஆயுதத்தால் தாக்கி படுகாயங்களுக்குட்படுத்திய நிஷாந்த குமாரசிாி என்பவராவார்.

பேலியகொடை குற்றத் தடுப்புப் பிாிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக வேயங்கொடை-ஹல்கம்பிட்டிய பிரதேசத்திற்கு இன்று (28) அதிகாலை அழைத்துச் சென்றுகொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட சம்பவமொன்றிலேயே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் காவல் துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.

Comments are closed.