கிரிக்கெட் மட்டையுடன் மைதானத்தில் ஜனாதிபதி
அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற 72ஆவது இராணுவ வருட பூர்த்தி நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக்கொண்டார்.
இதன்போது, ஜனாதிபதி கிரிக்கெட் மைதானம் ஒன்றை திறந்து வைத்ததுடன், ஜனாதிபதி கிரிக்கெட் விளையாடுவது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.
அதில் ஜனாதிபதி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திசர பெரேராவின் பந்துக்கு முகங்கொடுப்பதனை அவதானிக்க முடிகிறது.
இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜந்த மெண்டிஸும் கலந்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.