கிரீஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான  கிரீஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
முன்னதாக, இந்த நடுக்கம் 6.1 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்தது. கிரீஸ் நாட்டில் உள்ள கிரீட் தீவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
 கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறியதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளீயிட்டுள்ளன.

Comments are closed.