கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஆறு வான்கதவுகள் திறப்பு!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஆறு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று கடும் மழை பெய்துள்ள நிலையிலேயே, குறித்த வான்கதவுகள் திறக்கப்பட்டதாக, நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தாழ்நிலப்பகுதி மக்களை அவதானமாக செயற்படுமாறு கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேவேளை, பன்னங்கண்டி, முரசுமோட்டை, பரந்தன், ஊரியான், கண்டாவளை மற்றும் உமையாள்பரம் உள்ளிட்ட பகுதி மக்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, வாகனங்களை செலுத்தும் போது அவதானமாக செயற்படுமாறு, பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்

Comments are closed.