கிளிநொச்சி மாவட்டதின் காணி பகிர்ந்தளிப்பில் ஒரு முறைமை அவசியம்

ஒரு இலட்சம் காணி துண்டுகள் வழங்கும் செயற்றிட்த்துக்கு காணிகளை அடையாளப்படுத்தும் போது கிளிநொச்சி மாவட்டத்தில் குடியிருப்பு தேவைகளுக்கு காணி அற்ற மக்களின் தேவைகளையும் மாவட்டத்தின் எதிர்கால காணி தேவைகளையும் கருத்தில் எடுக்க வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மாவட்ட செயலரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இளம் தொழில் முனைவோர்களுக்கு ஒரு லச்சம் காணித்துண்டுகளை முதலீட்டு வாய்ப்புக்களுக்காக வழங்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அத்துடன் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள காணியற்ற மக்களுக்கு பளைப்பகுதியில் உள்ள காணி சீர்திருத்த ஆணைகுழுவுக்கு சொந்தமான காணிகளை பகிர்ந்தளித்து அவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்க்கு ஏற்பாடுகள் இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்

இதன்போது கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மற்றும் திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் பிரதேச சபையின் தவிசாளர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Comments are closed.