கிளிநொச்சி வைத்தியசாலை தீப்பரவல்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் தீடீர் தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் தற்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் தீப்பரவல் ஏற்பட்ட சிகிச்சை பிரிவுகளில் ஆய்வுகளில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றிரவு 11.45 அளவில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டது.

இதனையடுத்து, கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தீப்பரவலால் சேதமடைந்துள்ள சிகிச்சை பிரிவுகளின் சேவைகள் பிறிதொரு இடத்திற்கு உடனடியாக மாற்றி சேவையினை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.

Comments are closed.