கீதா குமாரசிங்கவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கடன் தொகை வழங்கப்படாமை காரணமாக, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்பிட்டியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்திற்கு பிரவேசித்த குறித்த நபர் தாம் குறைந்த வருமானமுடையவர் என்பதால், கடன் தொகையினை வழங்குமாறு கோரியுள்ளார்.

எனினும், அவர் குறித்த கடன் தொகையை பெறுவதற்கான தகுதியில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவினால் நிராகரிக்கப்பட்ட நிலையில், சந்தேக நபர் கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிடப்படுகிறது.

இதனையடுத்து ஊருகஸ்சந்தி காவல்துறையில் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.