குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்

குஜராத் மாநிலம் துவாரகா அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

மதியம் 12.37 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது குஜராத்தின் துவாரகாவில் இருந்து 556 கிமீ மேற்கே 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Comments are closed.