குடிசைக்குள் லாரி புகுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

மத்தியபிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ள ஆஜானி தபாரியா கிராமத்தில் ஒரு சாலையோர குடிசை அமைந்திருக்கிறது.

நேற்று முன்தினம் இரவு சாலையில் அதிவேகமாக வந்த ஒரு லாரி, அந்த குடிசைக்குள் புகுந்தது. அதில், உள்ளே உறங்கிக்கொண்டிருந்த 18, 14 வயதான அண்ணன், தம்பி இருவர், 16 வயதான அவர்களது தங்கை ஆகியோர் உடல் நசுங்கி இறந்தனர். படுகாயம் அடைந்த அவர்களது பெற்றோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

லாரியில் ‘லிப்ட்’ கேட்டு பயணம் செய்த மற்றொரு நபரும் இந்த விபத்தில் பலியானார். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed.