குளத்தில் மூழ்கி நான்கு சிறுவர்கள் பலி

ஆந்திர மாநிலம் விஜயவாடா அடுத்த கைக்கலூர் பகுதியில் உள்ள குளத்தின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, சிறுவர்கள் குளத்தில் தவறி விழுந்ததாக வந்த தகவலின் அடிப்படையில், தீயணைப்புத்துறையினர் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து அவர்களைத் தேடி வந்தனர்.

நீண்ட நேரத்திற்குப் பின், மூன்று சிறுமிகள், மற்றும் ஒரு சிறுவன் என நான்கு பேரின் உடல்கள் குளத்திலிருந்து மீட்கப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.