குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த என்ஜினியர் மனைவி கைது
கடந்த 10 ஆண்டுகளில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட உத்தரபிரதேச அரசு என்ஜினியரின் மனைவியை சிபிஐ கைது செய்துள்ளது.அவர் ஜனவரி 4 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ரம்பவன் அரசு என்ஜினியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கபட்ட குழந்தைகள், ஐந்து முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள், பண்டா, சித்ரகூட் மற்றும் ஹமீர்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ரம்பவன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் 8 மொபைல் போன்கள், ரூ. 8 லட்சம் ரொக்கம், செக்ஸ் பொம்மைகள், ஒரு மடிக்கணினி மற்றும் பிற டிஜிட்டல் சான்றுகள் கிடைத்தன.அங்கு ஏராளமான சிறுவர் பாலியல் துஷ்பிரயோக பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மின்னஞ்சல்களை ஆராய்ந்ததில் அவர் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருடன் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.
ரம்பவன் மனைவி துர்காவதியை சிபிஐ கைது செய்துள்ளது.அவர் கணவருக்கு உதவி செய்ததாகவும், சாட்சிகளை கலைத்து விடலாம் என அவர் கைது செய்ய்ப்பட்டு உள்ளார். துர்காவதி ஜனவரி 4 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.