கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை

கிராண்ட்பாஸ் – வெஹெரகொடெல்ல சந்தியில், கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

அடகு பிடிக்கும் சாதனம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால், நேற்றைய தினம் இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் பலியானார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர், குறித்த பிரசேத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளது.

Comments are closed.