கெஜ்ரிவால் நலம் பெற மம்தா வாழ்த்து

தலைநகர் டெல்லியில் கொரோனாவும், ஒமைக்ரானும் வேகமாக பரவி வருகின்றன. இதில் முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார். லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவரே நேற்று முன்தினம் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். எனவே தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இவ்வாறு தொற்று பாதித்து இருக்கும் கெஜ்ரிவால் விரைவில் குணம் பெற பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் கெஜ்ரிவால் நலம்பெற வாழ்த்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் ‘கெஜ்ரிவால் ஜி, நீங்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன். விரைவில் நலம்பெற்று வாருங்கள். உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Comments are closed.