கேரளாவில் முழு ஊரடங்கு

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. கடந்த 7 நாட்களில் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 94 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.
திருவனந்தபுரம் உள்பட 5 மாவட்டங்களில் கொரோனா பரவல் விகிதம் 50 சதவீதத்தை கடந்ததால் தியேட்டர்கள் மூடப்பட்டன.
நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கடந்த 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால்  இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.  அரசு போக்குவரத்து உள்பட அனைத்து போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக கேரளாவின் முக்கிய நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed.